தனி மாநிலம் கிடைத்ததால் வைரமூக்குத்தி காணிக்கை செலுத்திய முதல்வர்

வெள்ளி, 29 ஜூன் 2018 (08:12 IST)
ஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா என்ற மாநிலம் பிரிந்தது. இந்த புதிய மாநிலத்திற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் பல ஆண்டுகளாக போராடினார். தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைந்தால் பல கடவுள்களுக்கு காணிக்கை செலுத்துவதாகவும் இம்மாநிலத்தின் முதல் முதல்வர் சந்திரசேகரராவ் வேண்டுதல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில் தனது வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக சந்திரசேகரராவ் நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில், தெலுங்கானாவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் வீரபத்திர சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்குக் அவர் தனது வேண்டுதல்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக வீரபத்திர சுவாமிக்கு சந்திரசேகரராவ் வழங்கிய தங்கமீசை பக்தர்களை பெரிதும் கவர்ந்தது
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கையம்மன் கோயிலுக்கு நேற்று  சென்ற முதலமைச்சர் சந்திரசேகரராவ், அம்மனுக்கு வைர மூக்குத்தியை காணிக்கையாக வழங்கினார். வைர மூக்குத்தியுடன் ஜொலிக்கும் அம்மனை அவர் சில நிமிடங்கள் தரிசனம் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்