பாஜக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Sinoj

புதன், 13 மார்ச் 2024 (19:43 IST)
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,  திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி,  உள்ளிட்ட பல்வேறு  மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தல் 2024-க்காக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
 
அதில், கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரம், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இஉர்ந்து 72 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
இப்பட்டியலிலும், தமிழ்நாட்டில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை.
 
3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்