இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து தூய்மை இந்தியா திட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட போல்குமாரி, தனது வீட்டிலும் கழிப்பறை ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அவரதும் கணவரும் ஒரு கூலித் தொழிலாளி என்பதால், வேறு வழியில்லாமல், தன்னுடைய தாலியை அடமானம் வைத்து, தான் வசிக்கும் வீட்டில் கழிவறை கட்ட தொடங்கினார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, அவர் கழிப்பறையை கட்டி முடித்தார்.