காங்கிரஸ் தலைமை மற்றும் பஞ்சாப் மாநில எம் எல் ஏக்கள் ஆகியவரிடம் நற்பெயரை இழந்த அம்ரீந்தர் சிங், தன்னுடைய முதல்வர் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு ஆளானார். இதையடுத்து கட்சியை விட்டும் விலகிய அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார்.
ஆனால் காங்கிரஸை விட்டு அவர் விலகிய போதே பாஜகவில் ஐக்கியம் ஆக போகிறார் என யூகிக்கப்பட்டது. அதுபோலவே இப்போது எதிர்வரும் பஞ்சாப் மாநில தேர்தலை அவர் பாஜகவோடு இணைந்து எதிர்கொள்கிறார். இது சம்மந்தமாக பாஜக மூத்த தலைவர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பது தெரியவரும் என சொல்லப்படுகிறது.