இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்த எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க தான் தயாராக இருப்பதாகவும் எனவே அவையை சமூகமாக நடத்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.