குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜே.என்,யு. பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் ”நாட்டை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவோம்” என முழக்கமிட்டுள்ளார்கள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? எவரெல்லாம் தேசத்திற்கு எதிராக முழக்கமிடுகிறார்களோ அவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னே தள்ளப்படுவார்கள்” என அமித் ஷா எச்சரித்துள்ளார்.