நாடு முழுவதும் 96.88 கோடி வாக்காளர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

Sinoj

சனி, 16 மார்ச் 2024 (15:23 IST)
மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் நடைபெறவுளளதால் இதை அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட உலகத்தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், இன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
 நாடு முழுவதும் வருகின்ற மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
 
இதில், ஆண் வாக்காளர்கள் -49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்காள் 47.1 கோடிப் பேரும், மூன்றாம் பாலினத்தவர் - 48,044 பேரும் உள்ளனர்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட  தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6 சதவீதம் அதிகம் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்