ஒரே ஒரு தோசை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு: புதுமையான போட்டி!

திங்கள், 31 ஜனவரி 2022 (17:41 IST)
ஒரே ஒரு தோசை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு: புதுமையான போட்டி!
10 அடி நீள தோசையை சாப்பிட்டா; ரூபாய் 71 ஆயிரம் பரிசு என்றும் சாப்பிட முடியாவிட்டால் 1500 ரூபாய் அபராதம் என்றும் புதுமையான போட்டி ஒன்று நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் உள்ள உத்தம் நகர் என்ற பகுதியில் உள்ள உணவகம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான போட்டி ஒன்றை வைத்துள்ளது. இந்த ஓட்டலில் 10 அடி நீளமுள்ள தோசையை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அந்த 10 அடி நீளமுள்ள தோசையை ஒருவர் மட்டுமே தனியாக சாப்பிட்டால் ரூபாய் 71 ஆயிரம் பரிசு என அறிவிக்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் அந்த தோசையை சாப்பிட முடியவில்லை என்றால் அந்த தோசையின் விலையான ரூபாய் 1500 கொடுக்க வேண்டும் என்று அந்த உணவகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தோசையை சாப்பிட பலர் முன்வந்துள்ளதாகவும் இதுவரை யாரும் சாப்பிட்டு முடிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்