புதிய சாதனை படைப்பாரா ரஃபேல் நடால்! – ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி!

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (09:20 IST)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேறியுள்ள நிலையில் புதிய சாதனை படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் க்ரான்ஸ்ட்ஸ்லாம் போட்டி தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த ஜோகோவிச் கொரோனா விதிமுறை மீறலால் திரும்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து நடந்து வரும் போட்டியில் ரஃபேல் நடால் வெற்றி பெற்று இறுதி சுற்றை அடைந்துள்ளார்.

இறுதி சுற்றில் ரஷ்ய வீரரான மெத்வதேவுடன், ரஃபேல் நடால் மோத உள்ளார். இந்த இறுதி போட்டியில் நடால் வென்று சாம்பியன் பட்டம் பெற்றால் உலகில் அதிக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்