கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக தீபாவளியை ஒட்டி தங்கம் விலை குறைந்து வருவதால் ஏராளமான மக்கள் தங்கத்தை வாங்கினார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தீபாவளி முடிந்த பின்னரும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6060.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூபாய் 75.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75400.00 எனவும் விற்பனையாகி வருகிறது