பட்டாசு வெடித்ததால் சென்னை காற்று மாசு.; பொதுமக்கள் கருத்து என்ன?

திங்கள், 13 நவம்பர் 2023 (07:57 IST)
சென்னையில் விடிய விடிய வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்றின் தரம் மேலும் மோசம் அடைந்து தரக்குறியீடு 200-ஐ கடந்தது என செய்தி வெளியாகியுள்ளது.
 
நேற்று மாலை 4 மணி  நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 170-க்கு மேல் பதிவான நிலையில், தற்போது 200-ஐ கடந்தது என்றும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 256, ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகியுள்ளது.
 
பட்டாசு வெடிக்க அரசு சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொதுமக்கள்பட்டாசு வெடித்தனர். காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, No2. s02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளதாகவும் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் கடந்த 10ம் தேதி சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 83 என இருந்த நிலையில் தற்போது 200-ஐ கடந்துள்ளதாகவும் தெரிகிறது.
 
 ஆனால் பொதுமக்கள் இது குறித்து கருத்து கூறிய போது  ஒரே ஒரு நாள் பண்டிகை கொண்டாடுவதால் காற்றின் மாசு பெரிய அளவில் பாதிக்காது என்றும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது தான் முக்கியம் என்று மக்கள் ஒரு திருவிழாவை கொண்டாடும்போது ஒரு சில பாதிப்புகள் வந்தாலும் மக்கள் மகிழ்ச்சியே முக்கியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்