இதுகுறித்து செய்தியை கேள்விப்பட்ட சில ஊடகங்கள் நயன்தாரா போல் த்ரிஷாவும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவது தவிர்த்து வருகிறார் என்ற வதந்தியை கிளப்பிவிட்டன. ஆனால் உண்மையில் எப்போது பிரஸ்மீட் வைத்தாலும் அப்போது தான் வர தயார் என்றும் எனக்காக பிரஸ்மீட் தேதியை தள்ளி வைக்க வேண்டாம் என்றும் ஃபோட்டோஷூட்டை முடித்துவிட்டு கண்டிப்பாக பிரஸ்மீட்டுக்கு வந்து விடுவேன் என்று தயாரிப்பாளடம் த்ரிஷா கூறியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.