1000அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஐபோன் X; என்னானது தெரியுமா? வைரல் வீடியோ

வியாழன், 9 நவம்பர் 2017 (15:03 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் X ஸ்மார்ட்போனை 1000 அடி உயரத்தில் இருந்து கீழே போட்டு சோதித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


 

 
UnlockRiver என்ற நிறுவனம் புதிதாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தன்மைகளை சோதிப்பதையே வேலையாக செய்து வருகிரது. அந்த வகையில் தற்போது புதிதாக வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனை சோதனை செய்துள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஐபோன் X ஸ்மார்ட்போன் 1000 அடி உயரத்தில் இருந்து கீழே போட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் ஐபோன் X ஸ்மார்ட்போன் கட்டப்பட்டு, 1000 அடி உயரத்துக்கு மேல் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கீழே போடப்பட்டது. ஸ்மார்ட்போன் நேராக கான்கிரீட் தரையில் விழுகிறது.
 
போனின் பின்புறம் பலமாக சிதைந்து போனாலும் தொடர்ந்து வேலை செய்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

நன்றி: UnlockRiver.com

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்