விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளும் ஆப்பிள்; அடுத்து எல்ஜியுடன் கைகோர்ப்பு?

வியாழன், 12 அக்டோபர் 2017 (18:28 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவன டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஐபோன் மற்றும் லேப்டாப்களின் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனமே அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது சியோமி, ஒன் பிளஸ் போன்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆப்பிளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளன.
 
இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகிறது. அதன்படி சில விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளது. ஐபோனில் சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன்களில் எல்ஜி நிறுவனத்தின் டிஸ்ப்ளேக்கள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்