ஐபிஎல்-2021 கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு சிறப்பாகத் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுத் தங்கள் திறமையை நிரூபித்துக் கொண்டுள்ள நிலையில், சூப்பர் லீக் முடியும் முன்னமே சென்னை கிங்ஸ், ஹைதராபாத் அணி வீரர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.
ஏற்கனவே இந்தியாவில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.