ரொம்ப நாளாச்சுப்பா… சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்திய தோனி & கோ!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:18 IST)
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தோல்விகளைப் பெற்று பிளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆனால் இந்த ஆண்டு அந்த ஏமாற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்து வந்த 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்