கலைக்கட்ட துவங்கிய ஐபிஎல்: அடுத்த மாதம் அமீரகம் பறக்கும் சிஎஸ்கே!!

சனி, 25 ஜூலை 2020 (13:09 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் மாதம் அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல். 
 
கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி அதன்பின் ஏப்ரல் -மே என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஐபிஎல் போட்டிகள் ஒரு கட்டத்தில் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது.  
 
ஆனால் தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை ஐபிஎல் நடக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை மூன்று மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
 
அதற்காக ஒரு மாதம் முன்னரே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்