வெட்டி வேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.