வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி.. மாஸ் காட்டும் தொண்டர்கள்..!

Mahendran

திங்கள், 24 பிப்ரவரி 2025 (18:28 IST)
தமிழக வெற்றி கழகத்தின் கொடி வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை எடுத்துக்கொண்டு, விஜய் கட்சியை தொண்டர்கள் மாஸ் காட்டுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மூன்று மணி நேரம் நடைபாதையாக சென்று இறைவனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
 
இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், அங்கு உள்ள ஏழாவது மலை மீது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றிவிட்டு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
இதனை அடுத்து, போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மலை மீது அரசியல் கட்சி கொடியை பறக்க விட்டது யார்? எப்போது கட்டப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, இமயமலை பகுதியிலும் ஒரு தொண்டர், தமிழக வெற்றி கழகத்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்