புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தின வழிபாட்டு பலன்கள் !!

திங்கள், 3 அக்டோபர் 2022 (09:42 IST)
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.


புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, "திருவேங்கட மலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்க லங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப் பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா நமக்கு நமஸ்காரம்…. என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.

புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக் கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்க நாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடைபெறும்.

தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்த கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார்.

Edited by Sasikala
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்