புரட்டாசி சனிக்கிழமைகளுக்கு மட்டும் இத்தனை சிறப்புகள் ஏன் தெரியுமா....?
சனி, 1 அக்டோபர் 2022 (14:38 IST)
பொதுவாக சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சனி பகவான் தரும் கெடு பலன் களை குறைக்கும், பெருமாளின் அருளை பெற்று தரும் என்றாலும் புரட்டாசி மாதத் தில் வரும் சனிக்கிழமை கூடுதல் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது கூடுதல் பலனை அள்ளி தரும்.
வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், வருடம் முழுவதும் சனிக்கிழ மை விரதம் இருந்த பலனை பெற முடியும் என சொல்வார்கள். இதிலிருந்தே புரட்டா சி சனிக்கிழமை விரதம் எவ்வளவு மகத்தா னது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சனி பகவான், கலியுகத்திற்கு புறப்பட்ட தயாரான சமயத்தில் அந்த வழியாக வந்த நாரதர், சனி பகவானின் கலியுக பயணம் பற்றி விசாரித்துள்ளார். பிறகு, "பூலோகத் தில் எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால், திருமலை பக்கம் மட்டும் தவறியும் சென்று விடாதே" என எச்சரித்து தனது கலகத்தை துவக்கி உள்ளார்.
எதை செய்ய கூடாது என சொல்கிறார்க ளோ, அதை ஏன் செய்யக் கூடாது... செய்து பார்த்தால் என்ன நடக்கும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் அனைவருக்கும் இயல்பாக வருவது போல் சனி பகவானு க்கும் ஏற்பட்டுள்ளது.
நேராக திருமலைக்கு சென்று கால் வைத் த அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டார். அனைவரையும் துன்புறுத்தி பார்க்கும் சனி பகவானுக்கு, பூலோக வைகுண்டமா க திகழும் திருமலையில் என்ன வேலை என சனி பகவான் மீது கோபம் கொண்டா ர் திருமலை வேங்கடவன். அவரின் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்ட சனிபகவானிடம், திருமலை வந்து தன்னை வழிபடும் பக்தர்களை துன்புறுத்தக் கூடாது என கட்டளையும் இட்டார் மகாவிஷ்ணு.
நவகிரகங்களில் தன்னை மட்டுமே அனைவரும் வெறுப்பதாகவும், பாவ கிரகம் என ஒதுக்குவதாக கவலை கொண்ட சனி பகவானுக்கு மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய் சனிபகவான் தனது மனக்குறையை கூறி உள்ளார். இதனால் சனிபகவானின் கவலையை போக்க விரும்பிய மகாவிஷ்ணு, மற்ற மாதங்களை விட தனக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் அதிகமானவர்கள் உன்னை விரும்பி வழிபடுவார்கள் என வரங்களை கொடுத்தார்.