நவராத்திரி ஆறாம் நாள் தாம்பாளத்தில், நடுவில் அறு கோணமும், சுற்றிலும் பதினாறு இதழ் தாமரையுமாகக் கோலமிட்டு அலங்கரித்து, நடுவில் குத்து விளக்கேற்றியும், அறுகோண த்திலும் பதினாறு இதழ்களிலும், அகல் விள க்குகள் ஏற்றியும், ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யே நமஹ... என்று, அர்ச்சனை செய்யவும்.
ஜாம் வந்தே முகுந்தப்ரியாம்
இந்த சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தி, பால் அன்னம், பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செ ய்து, தீபாராதனை செய்து, தெரிந்த பாடல்க ளைப் பாடலாம்.
சுமங்கலிகளுக்கு சிகப்பு ரவி க்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, அம்பாளுக்கு ஆரத்தி எடுத்து, பூஜை யை நிறைவு செய்யவும்.
இவ்வுலகிற்கு ஐஸ்வர்யம் எனும் ஒளி தருபவள். பிரமன், ருத்ரன், இந்திரன் முதலியோர் அவளது கடைக்கண்பட்ட மாத்திரத்தில் சகல போகங்களையும் அடைந்தனர். மூவுலக நாய கனாகிய முகுந்தனின் ப்ரியநாயகியாகிய உன்னை வணங்குகிறோம்.