ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது.
மேலும், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் உள்ளன.