நேரலையில் வீடியோ கால் - ஜியோ இன்டெராக்ட்: இது எப்படி!
வெள்ளி, 4 மே 2018 (10:56 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ இன்டெராக்ட் (Jio Interact) என்னும் புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பிரத்யேக தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ஏற்கனவே ஹெச்டி வீடியோ கால்கள் மேற்கொள்ளும் வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Jio Interact மூலம் பிரபலங்களுடன் நேரலையில் வீடியோ கால் மூலம் பேசலாம். நடிகர் அமிதாப் பச்சன் 102 நாட் அவுட் திரைப்படத்தை இந்த செயலி மூலம் விளம்பரப்படுத்துவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலியின் அடுத்த கட்டமாக வரும் வாரங்களில் வீடியோ கால் சென்டர்கள், வீடியோ கேடேலாக், விர்ச்சுவல் ஷோரூம்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.
சேவையை பயன்படுத்துவது எப்படி?
# மைஜியோ செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
# அங்கு காணப்படும் Jio Interact சேவையை கிளிக் செய்யது வீடியோ கால் செய்யலாம்.
# மேலும், தங்களது வீடியோ கால் அனுபவத்தை ஷேர் ஆப்ஷன் மூலம் பகிரலாம்.
Jio Interact சேவை திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும், பிரான்ட் ஊக்குவிக்கவும் முன்னணி தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.