கடனை கழிக்க ஃபேஸ்புக்கை கைக்குள் போட்ட முகேஷ் அம்பானி??

புதன், 22 ஏப்ரல் 2020 (17:34 IST)
பேஸ்புக் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியதால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கே அதிக லாபம் என கூறப்படுகிறது. 
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதவாது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டீலிங்கால் முகேஷ் அம்பானிக்கு அதிக லாபம் இருப்பதாக தெரிகிறது. 
 
சமீப ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், இந்தப் பங்கு விற்பனை மூலம் கிடைத்துள்ள பணம் கடனை கழிக்க பேருதவியாக இருக்கும்.
 
2021 மார்ச் மாதத்துக்குள், அதாவது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், கடன் ஏதும் இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட பேஸ்புக் தற்போது உதவியுள்ளது. 
 
2016 ஆம் ஆண்டு ஜியோ தொடங்கப்பட்ட சமயத்திலிருந்து தற்போது வரை 370 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது அந்நிறுவனம். பங்குகள் பெறப்பட்டதால் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மெசேஞ்ஞர் சேவை மூலம் ரிலையன்ஸ் தனது வணிகத்தை மேம்படுத்தும் எனவும் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்