கடந்த 2010-ம் ஆண்டு மொபைல் மூலமான பங்கு வர்த்தகத்துக்கு செபி அனுமதி வழங்கியது. ஆரம்ப கட்டத்தில் தங்களது டீலர்கள் மூலமே வர்த்தகத்தை செய்துவந்தனர், பின்னர் புரோக்கரேஜ் நிறுவனங்கள் பிரத்யேக செயலிகளை(App) உருவாக்கியது. இதனால் மொபைல் வர்த்தகம் அதிகரித்துள்ளன.
இது குறித்த தகவல்களை பிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் படி கடந்த ஜூன் மாதத்தில் மொபைல் மூல மான வர்த்தகம் 2.12 சதவீதமாக இருந்தது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த வர்த்தகத்தில் 0.74 சதவீதம் மொபைல் மூலமாக நடந்தது. அதுபோல என்எஸ்இ-யின் மொத்த வர்த்தகத்தில் 3.32 சதவீதமாக மொபைல் வர்த்தகம் இருக்கிறது.
பிஎஸ்இ-யில் கடந்த ஜூன் 2012-ம் ஆண்டு 0.03 சதவீத வர்த்தகம் மட்டுமே மொபைல் மூலம் நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் 0.39 சதவீதம் மட்டுமே இருந்தது.கடந்த ஜூன் மாதம் என்எஸ்இ தகவல் படி ரூ.12,732 கோடிக்கு மொபைல் மூலமாக வர்த்தகம் நடந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், கோடக் செக்யூரிட்டீஸ், மோதி லால் ஆஸ்வால் பைனான்ஸியஸ் சர்வீசஸ், ஐஐஎப்எல், ஏஞ்சல் புரோக்கிங் ஆகிய நிறுவனங்களின் பிரத்யேக செயலிகள் ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோர்களில் உள்ளன.