பேரு‌ந்துக‌ளி‌ல் பு‌திய சேவைக‌ள்

செவ்வாய், 3 மார்ச் 2009 (12:20 IST)
நா‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் பேரு‌ந்து பேரு‌ந்து ‌‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு எ‌வ்வுளவு நேர‌த்‌‌தி‌ல் வரு‌ம் எ‌ன்பதை அ‌றியும் வகையில் சென்னையில் மேலும் 600 பேரு‌ந்துகளில் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கருவிகள் பொரு‌த்த‌ப்பட உ‌ள்ளன.

முத‌ல் க‌ட்டமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை பேரு‌ந்துக‌ளில் 2 மாதத்தில் அறிமுக‌ம் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளது.

பயணி ஒருவர், தா‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் பேரு‌ந்து எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பேரு‌ந்து நிறுத்தத்தில் உள்ள டிஜிட்டல் பலகையில் பார்த்து அறியும் வசதி, சென்னையில் மேலும் ‌சில வ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌ல் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று போக்குவரத்து துறை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் நே‌ற்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2,200-ஆக இருந்த மாநகர பேரு‌ந்துக‌ளி‌ன் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள், இந்த நிதியாண்டில் மேலும் 1,100 பேரு‌ந்துக‌ள் புதிதாக இயக்கப்படவுள்ளன.

அடுத்த ஆண்டுக்குள் 4 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சி நடந்து வருகிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.

நு‌ண்ண‌றிவு பேரு‌ந்து சேவை எ‌ன‌ப்படு‌ம் பேரு‌ந்தே ப‌ய‌ணிக‌ளிட‌ம் பேசு‌வது போ‌ன்ற சேவையை செ‌ன்னை மாநகர‌ப் போ‌க்குவர‌த்து‌க் கழக‌த்‌தி‌ல் கொ‌ண்டு வரு‌ம் ப‌ணிக‌ள் நட‌ந்து வரு‌கி‌‌ன்றன எ‌ன்றா‌ர் அவ‌ர்.

பேரு‌ந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பயணி, தான் போக வேண்டிய பேரு‌ந்து எத்தனை மணிக்கு வரும் என்பதை அங்குள்ள டிஜிட்டல் பலகை‌யி‌ல் பார்த்து தெரிந்து கொள்ளும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் (செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வசதி), 21 ஜி மற்றும் 70 ஆகிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 235 பேரு‌ந்துக‌ளி‌ல் இந்த வசதி உள்ளது.

இந்த வசதியினை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணா சாலை ஆகிய நகரின் 2 முக்கிய சாலைகள் வழியாக செல்லும் 600 பேரு‌ந்துகளில் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் 300 பேரு‌ந்துகளிலும், ஏப்ரல் மாதத்தில் மேலும் 300 பேரு‌ந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் எ‌ன்று அவ‌ர் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுதவிர, ஓடும் பேரு‌ந்துக்குள்ளேயே, பயணிகளுக்கு தானியங்கி கருவி மூலம் அறிவிப்பு வழங்கும் சேவை, 12 பி, 21 ஜி ஆகிய தடங்களில் 55 பேரு‌ந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படிப்படியாக, இது அனைத்து தடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் எ‌ன்று ராமசு‌ப்‌பிரம‌ணிய‌ன் கூ‌றினா‌ர்.

ஒரே டிக்கெட்டில் பேரு‌ந்‌திலு‌ம், ரயிலிலும் செல்லும் வகையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதை பற்றி மத்திய அரசுடன் பேசி வருகிறோம். இந்த திட்டம் அமல்படுத்தும்போது, சென்னை மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் ம‌ற்றும் மாநகர பேரு‌ந்துக‌ளி‌ல் ஒரே டிக்கெட்டு மூலம் பயணம் செய்ய முடியும். தற்போது ஒவ்வொரு கு‌ளி‌ர்சாதன வச‌தி கொ‌ண்ட பேரு‌ந்துக‌ள் மூலமாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் வருவாய் கிடைத்து வருகிறது எ‌ன்று‌‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பயணிகளிடம் மோசமாக நடந்து கொள்ளும் நடத்துனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் விதிமீறும் வகையில் செயல்படும் ஓ‌ட்டுந‌ர்க‌ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்