தனது இரண்டாவது குழந்தை பிரான்சில் பிறக்க வேண்டும் என்பது ஏஞ்சலினா ஜோலியின் விருப்பம். இப்போது விருப்பத்தில் திடீர் மாற்றம். கணவர் பிராட் பிட் மற்றும் மூன்று குழந்தைகளுடன் டெக்சாஸ் சென்றுள்ளார் ஜோலி.
குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், துணிகள் அடங்கிய இரண்டு பெரிய வேன்களுடன் டெக்சாஸின் சிறிய நகரம் ஒன்றில் லேண்ட் ஆகியிருக்கிறார் ஜோலி.
மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் ஜோலிக்கு 21 மாதங்களுக்கு முன்புதான் முதல் குழந்தை பிறந்தது. இன்னும் நான்கு மாதங்களில் இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது.
ஜோலியுடன் பிராட் பிட்டும் டெக்சாஸ் வந்துள்ளார். பிராட் பிட்டின் புதிய படத்தின் ஷ¤ட்டிங் டெக்சாஸில் நடைபெற உள்ளதால் டெலிவரி வரை அவர் ஜோலியுடன் தான் இருப்பார்.