கமல் ஜோடி இஷா ஷெர்வானி

புதன், 22 ஜூன் 2011 (16:26 IST)
தென்னிந்திய நடிகைகள் மீது கமலுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. சோனாக்‌சி சின்காவைத் தொடர்ந்து மேலுமொரு இந்தி நடிகையை தனது விஸ்வரூபம் படத்துக்காக தேர்வு செய்துள்ளார்.

லக் பை சான்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இஷஷெர்வானி. இவரை விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக கமல் தேர்வு செய்துள்ளார். இந்த வேடத்தில் ஸ்ரேயா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

விஸ்வரூபம் படத்தை கமலே எழுதி, இயக்குகிறார். ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்