யோகேஷ் பிக்சர்ஸ் வாங்கிய தம்பிக்கோட்டை

திங்கள், 29 நவம்பர் 2010 (14:40 IST)
முதலிரண்டுப் படங்களில் முரட்டு இளைஞனாக வந்தாலும் ஆ‌க்சன் ஹீரோவாக நரேனை அவரை அடையாளப்படுத்தவில்லை. அவருக்கு ஆ‌க்சன் ஹீரோ இமேஜை தரப் போகிற படம், தம்பிக்கோட்டை.

அம்மு ரமேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நரேன் ஜோடியாக பூனம் ப‌ஜ்வா நடித்துள்ளார். இவர்களுடன் இன்னொரு ஜோடியாக பிரபு, மீனா நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும் ‌ரிலீஸாகாமல் இருந்த தம்பிக்கோட்டையை யோகேஷ் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் வாய்ப்புள்ளது.

இந்தப் படத்தில் சங்கீதா வில்லியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்