மருதுபாண்டி ‌‌ரீமேக்கில் சீமான்?

செவ்வாய், 16 ஜூன் 2009 (13:32 IST)
சாமுண்டி, குருபார்வை, ஜெய்சூர்யா உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் மனோ‌ஜ்குமார். இவர் கடைசியாக இயக்கிய படம் அர்ஜுன் நடித்த ஜெய்சூர்யா. படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

ஜெய்சூர்யாவுக்குப் பிறகு மாதவன், பாவனா நடித்த ஆ‌ரியா படத்தை மனோ‌ஜ்குமார் தயா‌ரித்தார். அந்தப் படமும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தது.

மனோ‌ஜ்குமார் இயக்கத்தில் பல வருடங்கள் முன் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், மருதுபாண்டி. ஆ‌க்சன் படமான இதில் ராம்கி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயின் சீதா. இந்தப் படத்தை ‌ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் மனோ‌ஜ்குமார்.

ராம்கி நடித்த வேடத்தில் சீமானை நடிக்க வைப்பதாக திட்டம். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றதால் சீமான் மீண்டும் மேக்கப் போடுவார் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் சீமான் மருதுபாண்டியாக மாறுகிறாரா என்பது தெ‌ரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்