புதுமுகம் ரத்தன், மஞ்சு நடித்திருக்கும் படம் கார்த்திக் அனிதா. காதல் கதையான இது இந்த மாதம் திரைக்கு வருகிறது.
ஜாக் ஆனந்த் இசையமைத்தப் பாடல்கள் சென்ற வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய தங்கர்பச்சான், தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் நடிகர்கள் புரட்சி தளபதி என்றெல்லாம் பட்டம் போட்டுக் கொள்கிறார்கள். பட்டம் போட யாருமே தகுதியானவர்கள் இல்லை என இசை விழாவை சூடாக்கினார்.
இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். படத்தின் இருவேறு கட்டங்களை உணர்த்த இருவர் தேவைப்பட்டதாக கூறினார், படத்தின் இயக்குனர் ஸ்ரீஹரி. வழக்கமான காதல் படங்களில் இடம்பெறும் குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனம் எதுவும் இந்தப் படத்தில் கிடையாதாம்.
இவை எதுவும் இல்லாத யதார்த்த காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் என்றார் ஸ்ரீஹரி நம்பிக்கையுடன்.
ஆனால், தமிழ் சினிமா யதார்த்தம் வேற மாதிரி இருக்கே சார்.