குசேலன் - இன்னொரு பாபா?

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (19:05 IST)
வெளியான மூன்றாவது நாளே பாக்ஸ் ·பிஸில் முதலிடத்தைக் கைப்பற்றியது குசேலன். சென்னையில் மூன்று நாள் வசூல் எண்பத்தி ஒன்றரை லட்சம்! ஆனால், நான்காவது நாள்?

அனைத்து திரையரங்குகளும் வெறிச்! எப்போது போனாலும் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கலாம். சென்னை மல்டி பிளிக்ஸில் முதல் நாள் 43 ஷோ திரையிட்டவர்வர்கள், நான்காவது நாள் இருபத்து மூன்று ஷோவாக குறைத்துக் கொண்டனர். பிறநகர் திரையரங்குகளில் மூன்று ஷோவாக சுருங்கி, காலைக்காட்சியை மம்மி ஹாலிவுட் படம் ஆக்ரமித்துள்ளது.

இன்றைய உத்தேச கணக்குப்படி அறுபது கோடி ரூபாய்க்கு படத்தை வாங்கிய பிரமிட் சாய்மீராவுக்கு 20-25 கோடிகள் நஷ்டம். அவுட்ரேட் முறையில் படத்தை விநியோகித்தவர்களுக்கு ஐம்பது சதவீதம் வரை நஷ்டம். எம்.ஜி. முறையில் படத்தை திரையிட்டவர்களுக்கு நஷ்டம் முப்பது சதவீதம்.

இது உத்தேச கணக்கு. நாளை நஷ்டத்தின் அளவு கூடலாம், குறையலாம். ஆனால் நஷ்டம் உறுதி என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள்.

குசேலன்... நிஜமான வறியவன்!

வெப்துனியாவைப் படிக்கவும்