கோடம்பாக்கத்தில் இப்போதுதான் கேன்ஸ் பிரபலமாகியிருக்கிறது. ஃபிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவது கெளரவம். பரிசு வென்றால் சொல்லவே வேண்டாம். ஓவர் நைட்டில் உலகப் புகழ் வந்துசேரும்.
இந்த வருடம் கேன்ஸில் அஜித்தின் பில்லா திரையிட தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதாம். தமிழர்கள் தாராளமாக சந்தோஷப்படலாம்.
கேன்ஸில் மூன்று வகையான பிரிவுகளில் படங்கள் திரையிடப்படும். ஒன்று போட்டிப் பிரிவு. முக்கியமான திரைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். இரண்டாவது போட்டி அல்லாத பிரிவு. மூன்றாவது காசு கொடுத்து திரையிடுவது.
மொழி, வெயில் படங்கள் இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்தவை. அதாவது, காசு கொடுத்து கேன்ஸில் திரையிடப்பட்டவை.
பில்லா எந்தப் பிரிவு?
படம் சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல மாட்டார்கள். நாமாக கண்டுபிடித்தால் உண்டு.