மீண்டும் இணைகிறதா ஐகானின் பார்த்திபன் –வடிவேலு கூட்டணி… எதிர்பார்ப்பை எகிற வைத்த பதிவு!

vinoth

புதன், 19 பிப்ரவரி 2025 (13:01 IST)
தமிழ் சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பவர் இயக்குனர், நடிகர் பார்த்திபன். ஆனால் அந்த வித்தியாசத்தில் சில சமயம் கிருக்குத்தனம் அதிகமாகி சொல்லவந்த விஷயம் நழுவிவிடுவதால் அவரின் பெரும்பாலான படைப்புகள் பெருவாரியான வெற்றியைப் பெறுவதில்லை.

சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதைத் தவிர அந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசமாக எதுவும் இல்லாமல் படம் வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் டீன்ஸ் என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். அதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது பார்த்திபன் எக்ஸ் தளத்தில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது,ஆனா……!” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் வகை நகைச்சுவை போல பார்த்திபன் –வடிவேலு வகை நகைச்சுவையும் தனிச்சிறப்பு வாய்ந்தது. நீண்ட நாட்களாக இந்த கூட்டணி இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்குதான் ஏமாற்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்