ஹரியின் புதிய படம் சேவல். பரத் ஹீரோ. ஹரி - பரத் இணையும் முதல் படம் இது. தயாரிப்பாளர் ஜின்னாவுக்கும் இது முதல் படம். இதுவரை விநியோகஸ்தராக இருந்த ஜின்னா, சேவல் மூலம் தயாரிப்பாளராகிறார்.
ஆக்சன் படமான இதில் நேபாளி போலவே பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் பரத். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. கதை விவாதம் முடிந்த நிலையில், லொகேஷன் பார்க்கும் வேலையை தொடங்கியிருக்கிறார் ஹரி. இன்னொரு புறம் படத்தின் டிஸைன் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது.