கற்றது தமிழ் படம் முடிந்து ரிலீஸூக்கு தயாரான நிலையில் படத்தை மொத்தமாக வாங்கி தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தவர் காமெடி நடிகர் கருணாஸ்.
படத்தில் நடித்ததோடு தன் கடமை முடிந்ததென்று கிளம்பிப்போனவரை கூப்பிட்டு இந்தப் படத்தை வாங்குங்கள் பெரிய லாபம் வரும் என்று கருணாஸூக்கு ஐடியா கொடுத்ததே படத்தின் இயக்குனர் ராம்தானாம்.
படம் வெளியிட்ட வகையில் கருணாஸூக்கு 75 லட்சம் நஷ்டம். அதை சரிக்கட்டுவதற்காக...கருணாஸ் ஹீரோவாக நடித்து ஒரு படத்தை தயாரிக்க...ராம் இயக்கித் தரப்போகிறார். அதற்கான ஸ்க்ரிப்ட்டையும் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் இயக்குனர்!