இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை பயன்படுகிறது