கொத்தமல்லியில் உள்ள மருத்துவ நன்மைகள்....

சனி, 30 செப்டம்பர் 2017 (14:44 IST)
மிக எளிதாகவும் மளிவான விலையிலும் அனைத்து காலகட்ட்த்திலும் கிடைக்ககூடியது கொத்தமல்லி. இதனால்தான் என்னவோ அதன் பயன் நமக்கு அதிக அளவில் தெரியவில்லை.


 

# கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும்.
 
# கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. 
 
# மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள்  ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
 
# இரலை பலபடுத்தவதோடு, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை போக்குகிறது.  
 
# கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. 
 
# இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 
# கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். 
 
# தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்