திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. கிரிக்கெட்டுக்கு திரும்பும் யுவராஜ் சிங்? – ரசிகர்கள் குழப்பம்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:58 IST)
பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான முன்னாள் வீரர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் யுவராஜ் சிங். உலகக்கோப்பை டி20 போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து இவர் நிகழ்த்திய சாதனை இன்றளவும் பேசப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் “நமது தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான் மீண்டும் பிட்ச்சிற்கு திரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்