நேற்று லக்னோ அணிக்கெதிராக குஜராத் அணி விளையாடிய போட்டியில், குஜராத் அணி வீரர்களான சஹா மற்றும் சுப்மன் கில்லின் அபாராமான பேட்டிங்கால் 227 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 171 ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தது.
இந்நிலையில் பெரிய இன்னிங்ஸை ஆடிய விருத்திமான் சஹாவுக்கு ஓய்வு கொடுக்கலாம், விக்கெட் கீப்பிங்குக்கு கே எல் பரத்தை அழைக்கலாம் என்ற முடிவை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சஹாவையே அழைத்தனர். இதனால் அவசரத்தில் அவர் தன்னுடைய ஜெர்ஸி பேண்ட்டை திருப்பி போட்டு வந்துவிட்டார். இதைப் பார்த்து மைதானத்தில் இருந்த சக வீரர்கள் வாய்விட்டு சிரிக்க, அதன் பின்னரே அவர் உணர்ந்தார்.