அதன்படி களமிறங்கிய பெங்கால் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தமிழக அணி சார்பாக சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும், நடராஜன் மற்றும் அபாரஜித் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 85 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய தமிழக அணியும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தமிழக அணி 5 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தமிழக அணி விளையாடிய 2 போட்டிகளையும் வென்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது.