மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு… இந்த சீசனில் நட்சத்திர வீரர் விளையாட மாட்டாரா?

vinoth

புதன், 10 ஜனவரி 2024 (07:36 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது அவருக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இப்போது ஓய்வில் இருந்து வருகிறார். அவர் முழுவதுமாக குணமாக ஆறு வார காலம் ஆகும் என்பதால் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை இழக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் தன்னுடைய காயத்துக்காக ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் மார்ச் மாதமே தொடங்கும் ஐபிஎல் தொடரை அவர் தவற விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் காயத்தால் அவதிப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்