இந்த தோல்விக்கு இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாது. அதிலும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டிங் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் ஓய்வு பெறவேண்டுமென ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவர்களின் ஓய்வு பற்றி பேசியுள்ளார். அதில் “கோலி இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவார். ஆனால் ரோஹித் ஷர்மா விஷயத்தில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவரின் கால் ஆட்டம் சரியாக இல்லை. முன்வரிசையில் இறங்கி சரியாக விளையாடாமல் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.