நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் பலமாக மோதி வரும் நிலையில் சென்னை அணி கடந்த முதல் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளி வரிசையில் சிஎஸ்கே மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்திலும் உள்ளது.
முன்னதாக சிஎஸ்கே மேட்ச்கள் நடந்த வான்கடே மைதான், சின்னசாமி ஸ்டேடியம், ஈடன் கார்டன்ஸ் என அனைத்து மைதானங்களையும் தோனியின் மஞ்சள் படை ரசிகர்கள் கூட்டம் நிறைத்தது. நேற்றைய போட்டிகளில் சென்னை அணி தோற்றாலும் கூட மஞ்சள் படையினர் மைதானத்தை ஆக்கிரமித்திருந்தனர்.