இந்திய அணிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பாக பங்களிப்பு செய்து வருகிறார் முகமது சிராஜ். பும்ரா, ஷமி போன்ற பவுலர்கள் காயத்தால் அவதிப்படும் நிலையில் சிராஜ் சற்றும் தளராத உத்வேகத்துடன் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரின் பங்களிப்பால்தான் இந்தியா தொடரை சமனில் முடித்தது.
இந்நிலையில் சிராஜ், முன்னாள் கேப்டன் தோனி தனக்குக் கொடுத்த அட்வைஸ் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நீ நன்றாக விளையாடினால் உலகமே உன்னோடு இருக்கும். பாராட்டு மழைப் பொழியும். ஒரே நாளில் ஹீரோவாகிவிடுவாய். ஆனால் அடுத்த மேட்ச்சில் சொதப்பினால் ஜீரோதான். நீ கிரிக்கெட் விளையாடவே லாயக்கு இல்லை. உன் அப்பாவோடு சேர்ந்து ஆட்டோ ஓட்டு என்பார்கள். அதனால் பிறர் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் விளையாடு என்றார்” எனத் தெரிவித்துள்ளார்.