இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சுரேஷ் குமார் மற்றும் முகிலேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய அதிக் உர் ரஹ்மான் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.