இதனால் கோலி நடுவரான மேனனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. நடுவர்கள் எடுப்பதுதான் முடிவு என்றும் முடிவை மாற்ற சொல்லி கோலி கேட்பதும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒரு நல்ல கிரிக்கெட் வீரருக்கு அழக்கல்ல என்ற ரீதியில் பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. தொடர்ந்து கோலி இதுபோன்று வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.