இந்திய அணி செய்துள்ளது மிகப்பெரிய தவறு.. பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சனம்!

vinoth

ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:00 IST)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று இந்த உலகக் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ளது.  இந்த போட்டியைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் மழை காரணமாக இந்த போட்டி தடைபட வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கி இருப்பது தவறான முடிவு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இது குறித்து யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் “அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் கோலி தொடக்க ஆட்டக்காரராக சொதப்பி 1 ரன்னில் அவுட் ஆனார். அவர் மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கினால் மிடில் ஓவர்களில் அணியை வழிநடத்தி செல்வார்.  அதனால் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். கம்ரான் அக்மலின் இந்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்