AUS vs PAK ODI: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களில் வீழ்ந்தது. அதை தொடர்ந்து பேட்டிங் வந்த பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை அடித்து தொடரை கைப்பற்றி வென்றது.
முன்னதாக 2019ம் ஆண்டில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் சொந்த மண்ணிலேயே தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி 6 ஆண்டுகள் கழித்து தற்போது பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
Edit by Prasanth.K